Saturday 12 November 2011

அஜித் நீலவண்ண கண்ணனாக பார்த்து காப்பி அடித்தே அவதார் - ஜேம்ஸ் கேமரூன்



1) ஆழ்வார்' படத்தில் அஜித் நீலவண்ண கண்ணனாக வந்ததை பார்த்து காப்பி அடித்தே 'அவதார்' படத்தை எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன்.! @ thoatta

2) ஆண்கள் : ஆஃபீஸ்க்கு போனா வீட்ட மறக்க வேண்டியது ஆனா வீட்டுக்கு வந்தா ஆஃபீஸ மறக்காம வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது.. @soniarun

3)ஒரு விஷயத்த சீரியஸா சொல்றப்ப, புரியலன்னு பசங்க சொன்னா டீடெயிலா விளக்கனும், அதையே பொண்ணுங்க சொன்னா பேச்சை நிறுத்திக்கணும்.@ thoatta

4)மாமியார் வீட்ல மட்டும் ஏன் மாப்ளைங்க மாப்ள முறுக்கோட இருக்காங்க? ஸ்வீட் குடுத்துப்பாருங்க, ஸ்வீட்டோட இருப்போம், @senthil cp

5)மின்கம்பங்களில் மின்விளக்கு தொங்குகிறதோ இல்லையோ, கட்டாயம் ஒரு "விளம்பரப்பலகை" தொங்குகிறது."@noble

6)வராலாறு காணாத மழையால் வெள்ளம்ன்னு சொல்றது தவறு... புவியியல் காணாத மழையால் வெள்ளம்ன்னு சொல்றது சரி...@oneal



7)ஆண்கள் யாரையும் நம்பி எதையும் சொல்ல மாட்டாங்க, பெண்கள் யாரையும் நம்ப மாட்டாங்க ஆனா எல்லாத்தையும் சொல்லிருவாங்க .." @soniarun

8)நண்பன் ஒருவன்,தன்னை தூக்கி வளர்த்த பாட்டி இறந்துவிட்டார்,இந்தியா வரமுடியவில்லை-றீப்,என ஃப்ப்-ல் போட்ருக்கான்//  டேய் நீயெல்லாம் எதுக்குடா பொறந்த@ marmadesam

9) குடிகாரனை பிடிச்சு தள்ளி விட்டாலும் பழி தள்ளி விட்டவன் மேலே வராது. # வாக்கிங் போனப்ப அவதானிச்சது...@slumdev

10)தமிழை பேசுவதனால் மட்டுமே தமிழன் ஆகிவிடமுடியாது அப்படியானால் மாடு கூட அம்மா என்கிறதே.. #தத்துவம் @suganth

10)  கடும் நிதிநெருக்கடியில் 'கிங் பிஷர்' #விஜய் மல்லையாவின் மகன், தீபிகா படுகோன் பின்னாடி சுத்தும்போதே நெனச்சேன்'இப்படி எதாவது நடக்கும்'ன்னு.@pluss we

11)இந்தாம்மா இன்னில இருந்து இவருக்கு பதில இவரு தான் உனக்கு புருஷன் #தமிழ் மெகா சீரியல் கொடுமை @koothadi

12)என்னடா 15 நிமிஷம் குளிச்சோமே.. குளிச்ச பீலிங்கே வரலையேன்னு பார்த்தா, அப்புறம் தான் தெரியுது பல்லு விலக்கல...!@vairam sivakkasi

13)11.11.11 நூறு வருசத்துக்கு ஒருதாட்டி தான் வரும்னு கொண்டாடுறீங்களே, அப்போ 12.11.11 மட்டும் என்ன வருசா வருசமா வருது #அப்பாவி @grapedash

14) சந்தோஷத்த பகிர்ந்துக்க எனக்கு ஒரு காதலி வேண்டும்!!.. என்ன சந்தேகம்னா!.. காதலி வந்ததுக்கு அப்புறம் சந்தோஷம் இருக்குமா? @logaraaj

15) கருத்து வேற்றுமைகளுக்கிடையேயும் தொடரும் நட்பே உண்மையானது! மற்றதெல்லாம் வெறும் ஜால்ரா! @grapedash

16) அழகுநிலையங்களுக்கு சென்று பெண்கள் அழகாக்குவது "கடைக்காரரின் கல்லா பெட்டியை மட்டுமே" @thirukamaran

17)பிறந்தவுடன், தந்தையினுள் பல நல்ல மாற்றங்களை பிறக்க செய்கிறது 'பெண்குழந்தை'.. @pussuwe

2 comments:

நெல்லி. மூர்த்தி said...

"பிறந்தவுடன், தந்தையினுள் பல நல்ல மாற்றங்களை பிறக்க செய்கிறது 'பெண்குழந்தை'.."

அருமை! ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் மெனக்கெட்டு அழகான ஓவியங்களையும் அள்ளித் தருகின்றீர்கள். தொடர்ந்து கலக்குங்க

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

கடும் நிதிநெருக்கடியில் 'கிங் பிஷர்' #விஜய் மல்லையாவின் மகன், தீபிகா படுகோன் பின்னாடி சுத்தும்போதே நெனச்சேன்'இப்படி எதாவது நடக்கும்'ன்னு.@pluss we


அருமை,,,,,,,

Blogger Widgets