Tuesday 15 November 2011

கடைசி நாலஞ்சு படத்துல ஒரே சட்டைய திரும்ப திரும்ப போட்டுக்கிட்டு வரும் விஜய்





1) நடிகரின் மகன் கதாநாயகன் ஆகிறான் என்ற செய்தி தரும் எரிச்சல், நடிகையின் மகள் கதாநாயகி ஆகிறாள் எனும்போது இல்லை - பார்க்கத் துடிக்குது மனசு @kolaaru 

2) இழந்த காதலை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும் @kuttysuvarau 


3)பிடிக்காத நபரோடு ஊரறிந்து  வாழ்வது நல்ல காதல். பிடித்த நபரோடு ஊருக்கு தெரியாமல் வாழ்வது கள்ளக் காதல் - கற்பியல் @kolaaru


4)அருகில் இருந்தும் பேச முடியவில்லை. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை . எக்சாம் ஹாலில். - என்ன கொடும சார் இது @itsvinoth


5 ) பேசியே கொல்வதும் பேசாமல் கொல்வதும் பெண்களால் மட்டுமே இயலும். @apishthu


6) வீட்டில் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பதைத்தான் நிறைய கணவர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதாக சொல்கிறார்கள்.@powshya


7) பொது இடத்தில புகை பிடிப்பதை பிறகு தடை செய்யலாம். பொது இடத்தில் கொலை செய்வதை முதலில் கவனிக்கவும்.@greatviji

8) காதலில் விழுந்த பெண்களிடம் பேசுவது, போதையில் விழுந்த ஆண்களிடம் பேசுவதை விடக் கொடுமையானது - கொல்லுறாங்க @arasu1691


9) ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாக என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..@taamiraa


10)ஒரு ஈமெயில் அனுப்பிவிட்டு, அதைவிட வேகமாக ஓடிவந்து ,மெயில் வந்திருச்சா எனக் கேட்கும் மெனேஜெர்களை என்ன செய்யலாம் ? @naaraju


11) தலைவன்,  தலைவர் ஆகும்போதே வீழ்ச்சி ஆரம்பிக்கிறது @aarathu


12)இரக்கப்படுவது, சில நேரங்களில் நம்மை பார்த்து யாராவது இரக்கப்படும் அளவிற்க்கு மாற்றிவிடுகிறது. @

13)காதல் இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம்...ஒரு தலை காதல் இல்லாமல் இருக்காது


14) குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காக, காதலர்கள் தினம் காதலர்களுக்காக, அன்னையர் தினம் அம்மாக்களுக்காக, திருமண தினம் மனைவியர்களுக்காக.!@ 


15)  சிலர் இந்த சினிமா என்பது கற்பனை என்பதை உணராதது ஏன்?@ 


16) கதாபாத்திரங்கள் சீரியசாக பேசினாலும்,படம் பார்ப்பவர்கள் காமெடியாக எடுத்துக் கொண்டது கூட `வேலாயுதம்`வெற்றிக்கு காரணமாய் இருக்கலாம்.@ 

17) என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு.. அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 20  இருக்கு @ 


18)   வரலாறு காணாத தோல்வி - சொல்லாத காதல்! @ 


19)  அதிகமாய் செலவழிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு குற்றஉணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது . 


20) உங்க மனைவிக்கு தினம் பூ வாங்கிட்டு போறீங்களே அவங்க ரொம்ப அழகா?  இல்ல பூக்காரி ரொம்ப அழகு 


21)  இன்றைய சூழலில் ஒருவனை பைத்தியமாக்க வேண்டுமெனில்,அவனிடம் இருந்து செல்போனை ஒருநாள் பறிமுதல் செய்தால் போதும். @  

22)  இந்த குழந்தைகள் பொய்யான கதைகள் சொன்னால் நம்புகிறார்கள், ஆனால் உண்மையை சொன்னால் சந்தேக கேள்விகளாய் தொடுக்கிறார்கள்.!!! @ 


23) புகைக்க / குடிக்க ஆகும் செலவுகளில் பத்து சதவீதம் அதன் வாசனையை போக்க செலவாகுகிறது # சர்வீஸ் டேக்ஸ் @ 


24) பெரும்பாலான இளைஞர்கள் காலை சாப்பாட்டை இரு தினங்களில் சாப்பிடுவது இல்லை, விடுமுறை தினம், வேலை இருக்கும் தினம்.!!! @   



25)  விஜய்க்கு என்ன பண கஷ்டமோ, கடைசி நாலஞ்சு படத்துல ஒரே சட்டைய திரும்ப திரும்ப போட்டுக்கிட்டு வராரு.!!! @ 





































































































2 comments:

சேக்காளி said...

//ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாக என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..@taamiraa//
ஓட்டு இதுக்குத்தான்

nafees said...

என் ஓட்டும் இதுக்குத்தான்

Blogger Widgets