Wednesday 16 November 2011

உங்களுக்குள்ளே இருக்கும் போதி தர்மனை பார்க்க வேண்டுமா?



1) திரையுலகை நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்களில், திருட்டு டிவிடிகளால் வாழும் குடும்பங்களும் இருக்க தான் செய்கிறது #பர்மாபஜார் @sureztweets


2)குழந்தையின் கண்களுக்கு உலக அதிசயம் 7 அல்ல,  7 கோடி.. @naanenaan 


3)ரசித்து கட்டிய வீட்டில் உட்கார நேரம் இல்லை, வீடு கட்ட வாங்கிய தவணையை அடைக்க ஓட வேண்டி உள்ளது.#நகரத்துவாழ்க்கை @naanenaan 


4)பாஸ் வோர்ட்களை நினைவு படுத்துவதில் பல நேரங்களில் விரல்கள் மூளையை மிஞ்சிவிடுகின்றன. @ navi_n 



5) லிப்ஸ்டிகோடு நன்றாக மேக்-அப் போட்ட அயர்ன் செய்த சேலை கட்டிய "மிக ஏழை" பெண்களை சீரியல்களில் மட்டுமே பார்க்க முடியும் - @naanraman

6) எத்தனை பயங்கள் இருந்தபோதும் பாவங்களின் எண்ணிக்கைகள் குறைவதே இல்லை. 

7) எப்பயுமே போடுறதுக்கு டிரஸ் இல்லைன்னு பொலம்புற ஒரே ஜீவன் பொண்டாட்டி மட்டும் தான். @ 

8)அந்த காலத்தில் 10,  15 குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். இன்று ஒரு குழந்தைக்கே பிஸி, பிஸி என்று கதை விடுகிறார்கள். @

9) திருமணத்தில் எல்லோருக்கும் இஷ்டம், வாழ்வதில்தான் கஷ்டம்.@  

10)வளர்ச்சி என்பது, அப்பாவின் திட்டுக்கு கோபபடுவதில் தொடங்கி, மேனஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது. 
11)சச்சின் 100 வது சதம் அடிக்க தயவு செய்து "சென்னை 28" டீமுடன் ஒரு போட்டியை நடத்துமாறு மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். @

12)  வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.  #வேலாயுதம் வருவாண்டா  

13) கவுதம் மேனன் சச்சினை வைத்து படம் எடுக்கிறாராம், டைட்டில் '100 ரன்னைத்தாண்டி வருவாயா? 

14) அதிகமா செலவு செய்யறீங்க நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா பார்த்துக்குங்கன்னு பக்கத்துவீட்ல சத்தம்,   அடப்பாவி போனமாசம் தான் குழந்தையே பொறந்துச்சு.@ 


15)தூங்கி வழியும் போது இனி ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்க வேண்டும்,தூக்கம் வராத பொழுதுகளில் பயண்படுத்தி கொள்ளலாம். 

16)ஒருவர் அடிக்கும் மொக்கை ஜோக்கிற்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தால் ஒன்னு அவரிடம் பணமிருக்க வேண்டும் இல்லை பதவியிருக்க வேண்டும்.! @ 

17)எவ்வளவு சில்லறை போட்டாலும் நிறையாதது பஸ் கண்டக்டரின் பை மட்டுமே.. @

18) உலகத்தில் அழகான விஷயங்கள் 2 மட்டுமே, ஜனனமும்,  மரணமும்.ஆனால் அதற்கான காலத்தில் நடக்கும் போது மட்டுமே.@ 

19)பாகிஸ்தானின் திருவிளையாடல்களில் ஒன்று, சீனாவிடம் ஏவுகணை, விமானம் வாங்கி பச்சை பெயின்ட் அடித்து தான் கண்டுபிடித்தது என சொல்வது # முடியல.

20) நம்மூரில் கரகாட்டம்,   அவங்க ஊரில் சியர்லீடர்ஸ்.@ 

21)கணக்கு டீச்சர் கணக்கு பாடம் நடத்துவதை விட கொடுமையானது அதை நம்ம முகம் பார்த்து நடத்துவது.! @ 

22) ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றிப்போக சொன்னா ஆட்டோக்காரங்க ஒரு கிளாஸ்ரூமையே ஏத்திகிட்டு போறாங்க.!@

23)நம்ம எல்லோருக்குள்ளேயும் ஒரு போதி தர்மர் இருக்கார். ஆனா அத தூண்டி விட்றதுக்கு தான்  ஒரு ஸ்ருதிஹாசன் இல்ல@

24) காதல்.வென்றவர்களுக்கு இனிப்பு,தோற்றவர்களுக்கு கசப்பு,கிடைக்காதவர்களுக்கு புளிப்பு.@

25) சாதாரண சுற்றுலாவை இன்பசுற்றுலாவாக்க செல்போனை வீட்டிலயே விட்டுவிட்டு செல்லுங்கள்.!!!@ 
26) ஆரம்பத்துல இல்லாதது அந்த கடைசி கால் இஞ்சுல என்னதான் இருக்கோ? சிகரெட்டும், சிக்கன் லெக் பீசும்.!!!   @

27)ரஜினி வரும் வரை எதற்காக ராணா காத்திருக்க வேண்டும்! ரஜினிக்கு பதில் எம்.எஸ் பாஸ்கரை வைத்து தொடர்ந்து எடுக்கலாமே!  

28)இந்தியாவில் ஏழை பணக்காரர் என்ற வித்யாசம் இல்லாமல் இருப்பது   குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் மட்டுமே 


29)உலகப் பிரச்சனைகளில் எல்லாம் தலையிடும் அமெரிக்க ஜனாதிபதி தன்னாட்டு பிரச்சனையில் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்.@ 

30) ஊருப்பக்கம் யாரும் வந்தால் துரத்தி அடிப்பதும், ஊரூரா போனால் அடிச்சுத் துரத்தப்படுவதும் இந்திய கிரிக்கட்டின் ட்ரேட்மார்க்! @ 
31)என்னதான் பரம்பரை பரம்பரையாக எதிரியாக இருந்தாலும் எக்ஸாம் மண்டபத்தில் பக்கத்து பக்கத்து சீட் கிடைத்தால் நண்பனா(க்)கி கொள்வதே நலம்! @ 

32) தனிநாடு கூடாது என கொக்கரித்தவர்கள் இன்று தன்நாட்டையே சைனாக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்! #வளமான எதிர்காலம்! @ 

















































2 comments:

நெல்லி. மூர்த்தி said...

உங்கள் பதிவுகளில் ட்வீட்கள் அழகா அல்லது இதற்கிடையில் பொதிந்திருக்கும் சித்திரங்கள் அழகா என பட்டிமன்றமே வைக்கலாம் போலுள்ளது. கொள்ளை அழகு!

சேலம் தேவா said...

உங்க ப்ளாக்ல ட்விட்டர் follower widget வைங்க பாஸ்...

Blogger Widgets