Monday 14 November 2011

காதலிச்சா எனக்கிருக்கிற ஒரு தோஷம் போயிடும்னு சொல்றீங்களே.. என்ன தோஷம்?



1)முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம்., உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் - @AnjaaNenjan 


2)நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்! @naiyandi 

3) சமஸ்கிருதம் தேவ பாஷையாம்! அப்பறம் ஏன்யா மனுஷங்க அதை கத்துக்கறீங்க? @arattaigirl


4) பறக்கும் தட்டுகள் வேற்று கிரகத்திலிருந்து மட்டுமல்ல, சமையலறையிலிருந்து கூட வரலாம். @vedhalam


5) புளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது@vasanthen


6) எவ்வளவு தான் நீங்க வெள்ளைய இருந்தாலும் உங்க நிழல் கருப்பாதான் இருக்கும் .@carfire2
7) டென்ஸன் படுத்துறவரை விட டென்ஸனா இருக்கையில் கூல் ரிலாக்ஸ்னு சொல்லுறவர் மீதே கோபம்!எந்த கொடுமைக்கும் டென்ஸன் ஆகாம சிரிக்க நான் பைத்தியமா? @piegiee 

8)பெரும்பாலும் போனில் அம்மா எப்படி இருக்க என்றும் மனைவி எங்க இருக்க? என்றுதான் பேச துவங்குகின்றார்கள்.. @karna_sakthi

9)எதிரிக்கு எதிரி என் நண்பன் என்கிற ரீதியில் போகிறவன், எதிரிக்கு எதிரியையும் எப்பொழுதாவது எதிரியாக்கி கொள்வான்! @maethai
10)நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே… அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய் @pinjimanasu 

11)பொய் சொல்லுகின்றான் நண்பன் என்று தெரிந்தும "உம்" கொட்டுவது எவ்வளவு கொடுமை. @masilan: 

12) ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும்போதும் அவள் புடவை நமக்கு கிடைக்கலியே என பெண்ணும் அவள் நமக்கு கிடைக்கலியே என ஆணும் எண்ணுகிறார்கள்.@Sundaratamilan2

13) இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளெல்லாம் என்றோ ஒரு நாள் எவரோ ஒருவர் நடந்த ஒற்றை வழித் தடங்கள்தானே - @Sabarimba

14) டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம் @ராஜ்குமார் சின்னசாமி 
15)என்னதான் பத்தாவது மாடியில் பஞ்சு மெத்தையில் மல்லாக்காக படுத்துக் கிடந்தாலும் பூகம்பம் வரும்போது நடுதெருவில் நிற்பவனுக்குதான் சேஃப் ஜாஸ்தி @Arunothayan 

16)கோடி குடுத்தாலும் முகத்தில் வராத சந்தோஷம், மனைவி தன் தாயை அன்பாய் நடத்துவதில் ஒரு ஆண் மகனுக்கு கிட்டி விடுகிறது  @nithu

17).அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய 1000ரூ வரியை காட்டாமலிருக்க 900ரூ வரை லஞ்சமாக தரும் மனநிலையில் மக்கள் இருக்கும் வரை ஊழல் ஒழியாது.@ Thirunavukarasu

18)கடவுளுக்கு கோவம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவார்.. டாக்டர்க்கு கோவம் வந்தா கடவுள் கிட்ட அனுப்பிடுவார்....@முரளிதரன்
19) ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை ! கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.@கனியன்

20)  சவப்பெட்டி என்பது அது செய்யப்பட்ட மரத்திற்கும் சேர்த்து சேர்த்து என கொள்க! @வான்முகில்

21)காதலித்துப் பார்.. கையெழுத்து அழகாகும்; தலையெழுத்து மோசமாகும்.. @SaravanakarthikeyanC

22) இந்த பாட்டிங்கள்லாம் எப்படி தான் உக்காந்த இடத்திலிருந்தே ஊர்ல நடக்குறத எல்லாம் தெரிஞ்சிக்கிறாங்களோ.@ 

23)ஜலதோசத்துக்கு மாத்திரை போட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் போடலன்னா ஏழு நாளில் குணமாகிவிடும் # மறுபடியும் படிக்கவும் ;))@ 
24)யூஸ் அன்ட் த்ரோ என்று சொல்வது போல் யூஸ் அண்ட் கீப்' பொருட்கள் என்று எதையும் சொல்வதில்லை.@ 

25)ஃபாரின்ல கல்யாணப்பொண்ணு சர்ச்சுக்கு நடந்துபோற வீதிய கவுனால கூட்டிப் பெருக்கினே போறது சம்பிரதாயம் போல!@ 


 26 )காதலிச்சா எனக்கிருக்கிற ஒரு தோஷம் போயிடும்னு சொல்றீங்களே.. என்ன தோஷம்?

ஜோசியர்:- சந்தோஷம்.@ vidupuli

















































No comments:

Blogger Widgets