Sunday 13 November 2011

கூகுல் ப்ளஸின் அம்மாவும் அப்பாவும்..


1) சும்மா லவ் பண்ணினா 20 மார்க், சுமாரா லவ் பண்ணினா 40 மார்க், நல்லா லவ் பண்ணினா 80மார்க், சின்சியரா லவ் பண்ணினா டாஸ் மார்க் @i_am_mano


2)என்ன மழை பெய்தாலும் ஆபீசுக்கு லீவ் விட மாட்டாங்க #பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம்தான்- @prasannag6


3) எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் எனது பணியை தொடர்வார்கள் - விஜயகாந்த் # சரக்க பீப்பாயில ஊத்தி குடிப்பாங்களா ?@mkSakthivel


4) மகாத்மாவின் பிறந்த நாளில் மட்டும் "மதுவிலக்கு" என்பது என்ன மாதிரியான "மரியாதை செலுத்துதல்" என புரியவில்லை! @Rajeshjothi




5). தலைக்குமேல ஒருத்தன் கக்கா போனாலும், சிரிச்சுக்கிட்டே , இயல்பு வாழ்க்கைக்கு போவதுதான் , 'அப்பார்ட்மெண்ட் ' வாழ்க்கை @Pattapatti


6):உன் கை ரேகையைப் பார்த்து உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே...! ஏனென்றால், கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு @pirsan21


7). மழை வரும் நாட்களில் கூடவே என்றோ முடிந்துப் போன மழை நாட்களின் ஞாபகமும் சேர்ந்து வருகிறது @ChennaiDev

8) யார் தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்- விஜயகாந்த் ஆவேசம் #அதுக்கு மொதல்ல ஸ்டெடியா எழுந்து நிக்கணும் கேப்டன்! @Vithuvaan

9) இணைய உலகத்தில் ட்விட்டர் அம்மா என்றால் பேஸ்புக் அப்பா. கூகிள் பிளஸ் அவர்களின் குழந்தை.. ரெண்டு பேரோட சாடையும் அதுல தெரியுது. @urmoorthy

10)எதிரிகள் எனப்படுபவர்கள் ஒரு காலத்தில் நம்முடன் தொடர்புடையவர்களாக இருந்தவர்களே @thokkuchatti

11) சார் லோன் கேட்கறிங்களே, எங்க அக்கவுண்ட் வச்சுருக்கீங்க? # டிவிட்டர், பேஸ்புக், கூகுல் எல்லாத்துலயும்!!! @ rghavan66

12) என்னுடன் படித்த பெண்களில் நிறைய பேர் சாதிக்க விரும்பினார்கள்… #ஆனால் சாதிக் தான் யாரையும் கண்டுகொள்ளவில்லை @kaattuvaasi

13)அடிப்பட்டா ஆம்புலன்ஸ் கூப்பிடறதுக்கு முன்னாடி ட்விட்டர்லயும், ஃபேஸ்புக்கிலேயும் போடுவாங்க போல சில பேரு @iamkarki

14) விமர்சிக்கையில், 'உங்க அம்மாவும் பெண்தான்' என்று பெண்கள் சொல்வது போல், எந்த ஆணும் 'உங்க அப்பாவும் ஆண்தான்' என்று சொல்வதில்லை. #அவதானிப்பு- @Balu_SV

15)ஒரு தவறு செய்துவிட்டு திட்டு வாங்குவதைவிட, அந்த திட்டை வாங்க காத்திருக்கும் நேரம் மிக கொடுமையானது.@DKCBE

16) பசங்க, நின்னு பேசுனா கூட கெடைக்காத செல்போன் டவர், நடந்துட்டே பேசற பொண்ணுகளுக்கு மட்டும் எப்புடிய்யா இடைவிடாம கெடைக்குது? @Tottodaing

17). என்ன கண்ராவிடா இது? வெள்ளைக் கலர் ஷூ கருப்பு கலரிலே அழுக்காவுது. கருப்பு கலர் ஷூ வெள்ளைக் கலரிலே அழுக்காவுது! @mayavarathaan

18) எந்த ஒரு கடினமான காரியம் தொடங்கப்ப்படும்போதும் முட்டுக்கட்டை போடுவது நெருக்கமானவர்களே. @sandhyacharu

19)பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மஹால் கூட கட்டலாம்... பணம் இல்லைனா உயிரோட இருக்குற காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது.@thoppi_az

20) பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறுவதால் சைக்கிளில் போகும் பசங்களையும் திரும்பி பார்க்கும்மாறு பெண்களை கேட்டு கொள்கிறேன்.@Vaanmugil

1 comment:

நெல்லி. மூர்த்தி said...

"உன் கை ரேகையைப் பார்த்து உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே...! ஏனென்றால், கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு"
------------------------
தன்னம்பிக்கை வரிகள்...
---------------------------
"பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறுவதால் சைக்கிளில் போகும் பசங்களையும் திரும்பி பார்க்கும்மாறு பெண்களை கேட்டு கொள்கிறேன்."
------------------------
குசும்பு தான் போங்க..

Blogger Widgets