Friday, 25 November 2011

வீராசாமியை பார்த்து வாயடைத்து போன கிங்காங் இயக்குனர்

1) உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!!
  வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!!



2) மனைவியை ஊருக்கு அனுப்ப ரயில் நிலையம் வரும் ஆண்கள் எனக்கு சிவாஜியாக தெரிகிறார்கள் # கண்ணுல சோகம்.. உள்ளுக்குள்ள உற்சாகம் .. உலக நடிப்புடா சாமி ! @g_for_guru




3) தூக்கம் :   அலாரம் அடிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது வருவது @  



4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @ 



5) தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!! @



6) ஏழாம் அறிவு சரித்திர படம்!  ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்! # கொலைவெறி விஜய் ஃபேன்ஸ் கிளப்" 



7) ஒஸ்தி படத்தில் சிம்புவின் போலீஸ் கெட் எப் ஐ பார்க்கும் போது சன் டிவி மலரும் மொட்டும் நிகழ்ச்சிக்கு வந்த சிறுவன் மாதிரி இருக்கு @



8) நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:
திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான். @




9)  ராமராஜன் நடிச்சபடம் வில்லுப்பாட்டுக்காரன்.அத பாத்துபுட்டு செத்துபோனான் எங்கஊட்டுக்காரன் 



10) கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்! 
     ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!! @ 



11)  நடுநிசி நாயும்...! குடிகாரன் வாயும்...! சும்மாவே இருக்காது போல 
  # ஒரே பெனாத்தல். @



12)  இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை,  மற்றும் தமிழக மீனவன்.! @




13) 6மாசபயணத்தில் செவ்வாய்கிரகம் செல்ல பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்:..  எங்காளுங்க சரக்கு அடிச்ச‌ 10 நிமிஷத்திலயே செவ்வாய்க்கு போய்டுவாங்க.@ 



14) பணத்தை துரத்தும் மனிதர்கள் தனக்கு பின்னால் தன் குடும்பம் வருவதை கூட மறந்து ஓடுகின்றனர். @ 



15) தோளுக்கு மேல் வளர்ந்தவனை அடிப்பதே தவறு,
      இப்படி வெட்டலாமா? # மரம்  



16)நல்ல குடும்பத்து பெண்கள் காதலில் விழுவதில்லையாமே ? அப்போ ,என் காதலி குடும்பம் அவ்வளவு கேவலமானதா ? @ 



17) பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
 இப்பொழுது "BOY FRIEND  " என்கிறார்கள். @ 



18) வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு
 நல்ல காரியத்திற்கு வருவதில்லை. @




19) பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் :
 அழுக்கு சட்டை - வெள்ளை சட்டை ! @ 



20) நாம் மாறும்போது தானும் மாறியும், நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. 
அதற்கு நம் நிழலே போதுமே! @ 



21) காசு இல்லாட்டி ஒண்ணுமே வாங்க முடியாதாமேன்னா கடன் வாங்கலாமேங்கறான் பக்கத்து டேபிள் கடங்காரன்.! @ 



22) காலையில் மனைவி திட்டியதற்கு நானும் பதிலுக்கு பயங்கரமாக திட்டிவிட்டேன்-  ஆபிஸ் ப்யூனை. @



23)  L  போர்டு ஸ்டிக்கர்னாலும் சூப்பர் ஸ்டைலா டிஸைன் பண்ணி கார்ல ஒட்டீருக்கீங்க பாஸ்! நல்லாருக்கு! என்றேன்!
 முறைத்தான்!  லயன்ஸ் கிளப்பாம்! :-) @ 



24) நகரத்தில் அறிவாளியாக இருப்பதை காட்டிலும் கிராமத்தில் வெகுளியாக இருப்பதை விரும்புகிறேன் -  நிம்மதி @



  • 25) எல்லோருமே நேர்வழியில வந்திருந்தா உலகம் இவ்வளவு முன்னேறியிருக்காதோ, என்னவோ..





  • 26)ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி... @thirumarant 




    27) make money னு ஒரு பக்கி mail அனுப்புது.. ஒரு வேல கள்ள நோட்டு அடிக்க சொல்லி கொடுப்பானுவளோ ???





    28)அன்று தாலாட்டைகேட்டு தாய்ப்பாலை குடித்து குழந்தைகள் வளர்ந்தன! 

    இன்று டப்பாங்குத்து பாடலைகேட்டு டப்பாபாலை குடித்து குழந்தைகள் 

    வளர்கின்றன!





    29)தமிழ்நாட்டுல கரண்ட் பில்ல ஆன்லைன்ல கட்ட வசதி இருக்கு, But..

    Computer ஆன் செய்ய தான் கரண்ட் வசதி இல்லை..என்ன கொடும சார் இது

    @Prabu_B 





    30) வாகனம் ஓட்டுதல் என்கிறது ஒரு கலை! எந்த மொடல் வாகனமாவே 


    இருந்தாலும் ஓட்டுறவன் கைலதான் அதோட அழகே! @Me_Newton









    31)  சச்சின் சதத்தை எட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். 94 அடித்ததற்காக எவருக்கும் பாராட்ட தெரியவில்லை! @






    32) தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ் 'ஒய் திஸ் கொலைவெறி' பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ 



    33) எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ???? @

    34) கிராபிக்ஸே இல்லாமல் எப்படி முழு படமும் எடுத்தார்கள்? 
    வீராசாமியை பார்த்துவிட்டு கிங்காங் இயக்குனர் குழப்பம்.! @  


    35) அடப்பாவிகளா.. ‘my' அப்படீன்றதே ரெண்டு எழுத்து. அதையும் சுருக்குறேன்னு 'ma' அப்படீன்னு மாடு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!


    36) புரட்சியாளர் ஆவதற்கு எளிய வழி புரிஞ்சது, புரியாதது எல்லாவற்றையும் கண்டபடி விமர்சனம் செய்யணும்.@ 


    37) செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
    ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.



    38)  ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்.@ 


    39) நேற்று சினிமாவிற்கு ஒரு பெண்ணோட வந்திருந்தியே அவள்தான் உன் காதலியா? 
    காலைக்காட்சியா……….மாலைக்காட்சியா..? @  


    40) கிரிக்கெட்டில் உலகசாதனை என்று சொல்றாங்களே விளையாடுவது பத்து நாடு...இதுல சாதனை செஞ்சா எப்படிய்யா உலகசாதனை ஆகும்! # டவுட்டு @ 

    1 comment:

    Anonymous said...

    ஐயோ சாமி சிரிச்சு வயிறு வலிக்குது

    Blogger Widgets