Saturday 12 November 2011

வேலாயுதம் டிரைலர ஐபோனில் பார்த்து உயிரை விட்ட ஸ்டீவ் ஜொப்

1) பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்?@iamkarki


2) இரண்டு தர்மபிரபுகளும், பத்து சாவுகிராக்கிகளும் சிக்குகின்றனர், சிக்னலில் பிச்சை எடுப்பவருக்கு @ipokkiri



3)துணிக்கடை விற்பனையாளர்கள்தான் உலகிலேயே மிகப்பொறுமைசாலியாக இருக்கவேண்டும் எத்தனை பெண்கள் எத்தனை கேள்விகள் யப்பா @vembaikrishna 


4) மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு# எரிஞ்சப்பறம் தான அது் விஜயகாந்த் மாதிரி இருந்திச்சாம்!!! @g_for_guru


5)தத்துவங்கள் பரிமார படுகிறதே தவிர கடைபிடிக்கபடுவதில்லை...@Selvam1155


6)எந்த கவலையும் இல்லாம படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வர!!.. ஒண்ணு குழந்தையாக இருக்கணும்!!.. இல்ல குடிகாரனா இருக்கணும்!@logarajaks


7)அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பை, நாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை... #அவதானிப்பு
@Balu_SV

8)தும்மல் வருதுன்னு கண்ண மூடி தும்மிட்டு பாத்தா கரண்டு போயிருச்சு நான் எனக்குதான் கண்ணு போயிருச்சோனு பயந்துட்டேன்.. :-( @sheik007


9)முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து Adobe photoshop   @Rathikaarul


10) சரக்கு சபையில் குடிக்காதவனைச் சேர்க்கக் கூடாது! நாம் பேசுவதை மறுநாள் காலையில் அவன் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பான்!@RajanLeaks


11)இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா? @Rajeshjothi


12)  புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் @DharamBaskar


13) நீ சொல்வதை எல்லாம் உன் மனைவி கேட்க வேண்டும் என்றால் , தூக்கத்தில் பேசு  @gokulgym





14) ஜவுளிக்கடையில் நாம் எடுக்கும் துணிமணிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டது தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் @gnani_ 

15) பய புள்ள கடைசியா வேலாயுதம் டிரைலர ஐபோன்ல டவுண்லோட் பண்ணி பாத்து இருக்கான்! # SteveJobs  rest in piece    @ThalaThalapati


16)  புன்னகை மட்டுமே கொடுத்தவுடன் திரும்ப கிடைகிறது. @nandulakshmi 



















































3 comments:

ad said...

@ 12) புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் @DharamBaskar

நல்லதொரு சிந்தனை.உண்மையில் அவர்களின் மனதிலும் ஆசைகளிருக்கும்,கையில் வசதியிருக்காது.மற்றவர்கள் வாங்கும்போது எவ்வளவு ஏக்கம் அடைவார்கள்.ஏற்றத்தாழ்வுகள் அற்ற காலம் எப்பொழுதுதான் உருவாகுமோ.!

நெல்லி. மூர்த்தி said...

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்! உங்க பதிவுகள்ல வர்ற நகைச்சுவை ட்வீட்களை படிச்சாலே மருத்துவமனையை மறந்துவிட வேண்டியது தான். ஹ ஹ ஹ...

நெல்லி. மூர்த்தி said...

அந்த விரலோவியம் அருமை!

Blogger Widgets