Thursday 17 November 2011

தலைவர் முதலில் மீனா பொண்ணு கூட நடிப்பாரா இல்ல ஐசு பொண்ணு கூட நடிப்பாரா?

1) அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் வாங்கி படித்து விட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி “அண்ணா யாரையாச்சு லவ் பண்ணுறியா….!!!..” @vedupili 

2) காதலர்களை கவுரவ கொலை செய்பவர்கள், அவர்களை அப்படியே வாழவிடுவதுதான் பெரிய தண்டனை என்பதை அறியாதவர்கள். @ 


3)பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும். 


4)  எனக்கென்னவோ பிரசன்னா"முரண்"படத்த விட தன் கல்யாணத்தில் பெரிய"ரிஸ்க்"எடுக்கிறதா தோணுது!@ 

5) எல்லா மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக இருந்தவர்கள்தான். இந்த தத்துவம் ஏன் மேனேஜர்களுக்கு மட்டும் புரியவே மாட்டேங்கிறது.

6) மரத்தடியில் பயின்ற பிள்ளைகள்,  கான்கிரீட் கட்டடங்களில் பயிலும் நம் பிள்ளைகளை விட நிச்சயம் சந்தோஷமாக இருந்திருப்பார்கள் ...@ 
7)  இல்லாத கேள்விக்கு பதில் யோசிச்சா அவன் ஞானி, இல்லாத கேள்விக்கு பதில் கண்டுபுடிச்சா அவன் விஞ்ஞானி.@ 

8) தலைவர் முதலில் மீனா பொண்ணு கூட நடிப்பாரா இல்ல ஐசு பொண்ணு கூட நடிப்பாரா? #டவுட் @ 



 9) அருகம் புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அவள் அப்பன் எருமை போல மேய்ந்துவிட்டான். @

10) எப்போதும் எதையோ ஒன்றை எதிர்பார்த்தோ, எதையேனும் தேடியோ,எதற்கேனும் ஏங்கியோ,எதற்காகவோ காத்திருப்பிதிலோ கழிகிறது வாழ்க்கை...@

11)  இலங்கை செல்ல விருப்பம் -விஜய் #எதுங்ணா நீங்க உலக மேப்லருந்தே அழிப்பேனு சொன்னீங்களே அதுங்க்ளாண்ணா. @

@ 
12) மனைவியை காதலிக்கத் தெரியாதவன், சுவாரஸ்யமான நாவலின் பின் பாதியை இழந்தவன்!  

13)  மணப்பெண்ணுக்கு செய்ற அலங்காரத்தில பாதியாவது மணமகனுக்கு செய்யுங்கப்பா! பயம் தெளியட்டும்!! @

14)  நடு ராத்திரியில நல்லகாலம் பொறக்குதுன்னு கோடங்கி சொல்லிட்டு போறான்;நாளை மனைவி ஊருக்கு போகிறாள்! @

15) சொத்துக்கணக்குகளை பொறுத்தே நம்மிடம் சொந்தங்களின் கணக்கு வழக்கு அமைகிறது.@ 

16) நோக்கு வர்மம் அழிய வில்லை. தமிழகத்தில் எல்லா மனைவிகளும் தங்கள் கணவர்களை அடக்கவும்,முடக்கவும் அதைதான் பயன்படுதுகின்றனர்!  @

17)  "நீ பிறந்தவுடன்!.. அவசர, அவசரமாய், தமிழ் அகராதியில்!.. சேர்க்கப்பட்ட வார்த்தை தானோ?.... ** அழகு **. @ 



18)  அன்று நதிக்கரை ஓர விவசாயத்தில் தோன்றிய நாகரிகம்,இன்று சாக்கடை ஓர உணவகங்களில் திணறிக்கொண்டிருக்கிறது! @ 

19) தீமை செய்தால் மிருகமாகவும்,  நன்மை செய்தால் தெய்வமாகவும் பார்க்க படும் மனிதன் எப்போது மனிதனாக பார்க்க படுகிறான்?  @

20) தங்கத்தின் விலையேற விலையேற பெண்களின் திருமண வயது ஏறும்- நேர் விகிதம்! @

21)  எந்த நூற்றாண்டில் வந்த நோய்னாலும் அத சரிசெய்ய‌ நம்ப‌ டாக்டர்.ராமதாஸ் இருக்காரு.இது தெரியாம சில பேர் படம் எடுத்துட்டாங்க‌. @ 7ஆம் அறிவு 

22) அம்மா,நான் கட்டினது எல்லாம் மாத்துறீங்க இந்த ராசாத்தி மற்றும் தயாளு அம்மாளையும் மாத்தினீங்கன்னா புண்ணியமாபோவும்- கலைஞர் 

23) ஒடிஸா' வாக மாறியது 'ஒரிஸா' #  அப்படியே தமிழ்நாட்டையும் 'தமிழீழம்' என மாத்துங்க இங்கேயாவது அது மலரட்டும் ..”  
24) கலண்டரில்  தினமும் தேதி கிழிக்கிறது முக்கியம் இல்லை அன்றைய தேதிக்கு என்ன கிழிக்கிறோம் அதான் முக்கியம்:) @ 

25)  பணம் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடாது. ஆனால், எல்லா பணப் பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.! @ 

26)  நிச்சயமா,சத்தியமா எனக்கு ட்விட்டர் - ஃபேஸ்புக் தாண்டி ஒரு லைஃப் இருக்கு. ஆனா அதோட பாஸ்வேட் மறந்து போச்சே.. 

27)விஜய்  படம்னா கிண்டல் பண்ணுவ இன்னிக்கி வேலாயுதத்துக்கு மொத ஆளா நிக்குற?  ஆபிஸ்ல மெனேஜரோட ஒரு பிரச்சின #  Go to hell ன்னு சொல்லிட்டாரு

28) காஞ்சனா படம் பார்த்து எங்கள் குடும்பமே சிரித்தது - விஜய் பேட்டி # தம்பீ உங்க படம் பாத்துட்டு ஊரே சிரிக்குது  @ 


29) அன்புள்ள அம்மா, எமெர்ஜென்ஸி லைட்டுக்கு சார்ஜ் ஏத்தற அளவுக்காவது கரண்ட் சப்ளை செய்யவும். தங்கள் இருட்டிலுள்ள தமிழன். @

30) படம் பிடிக்கலைனா இன்டர்வெல்லில் எழுந்து போங்கப்பா. தியேட்டர் copy v.c.d ல பாக்கும்போது மறைக்குதில்ல?  @





No comments:

Blogger Widgets