Monday 21 November 2011

ஒரே கதைய பிக்ஸ் பண்ணி 9 வருசமா நடிப்பவருக்கு சிறை !!!

1) அனைத்து செல்போன் சேவைகளும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை தெரியவரும்.  



2) கல்யாண செலவில் கால்வாசி,  நிச்சயதார்த்துக்குப் பின் செல்போன் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது! @ 



3) உதட்டில் இருக்கும் சிகரெட்,கதை முடிந்தவுடன் காலில் மிதிப்படுவதை போல அரசியல்வாதிகளுக்கு தேர்தல் முடிந்தவுடன் மக்கள்.!  



4)  தலயின் அடுத்த படங்கள் பில்லா-டூ,  இந்தியன்-டூ,  சந்தரமுகி-டூ,  பாட்ஷா-டூ, அய்யோ சாமி தலை சுத்துதூ, ஆள விட்டுடூ :) @ 



5)  ஏழைகள் பணக்காரர்களிடம் உள்ள பணத்தை பார்த்தும்,
பணக்கக்காரர்கள் ஏழைகளிடம் உள்ள நிம்மதியை பார்த்தும் பொறாமை படுகின்றனர்... @ 



6)  தன் தந்தையுடன் 10நிமிஷம் பேசமுடியாதவர்களுக்கு Facebook , twitter ல் முகம் தெரியாதவர்களுடன் சம்பாஷணையில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியமாகிறது @ 



7)  முதலில் இருக்கும் சுவாரசியம் நாளடைவில் குறையத்தான் செய்கிறது எல்லா விசயங்களிலும். @ 


8) இந்தியாவில் மொபைல் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 80 கோடியானது, 
அதில் மிஸ்ட் கால் கொடுப்போர் எண்ணிக்கை 28 கோடி, 
அட பெண்களை சொன்னேன்பா..@ 



9) அடிமை, கொத்தடிமை என்ன வித்தியாசம்? 
பணத்துக்காக கல்யாணம் பண்ணினா அவன் அடிமை! 
வசதிக்காய் வீட்டோட மாப்பிள்ளையாப் போயிட்டா அவன் கொத்தடிமை.!@



10)  மேட்ச் பிக்சிங் செய்த பாக். வீரர்களுக்கு சிறை.. 
# இங்க ஒருத்தரு ஒரே கதைய பிக்ஸ் பண்ணி ஒம்போது வருசமா நடிக்குறாரே!
@ 



 11) சிங்கிளா இருக்கும்போது லவ் பண்றவங்க சந்தோஷமா தெரியறாங்க,
லவ் பண்ணும்போது சிங்கிளா இருக்குறவங்க சந்தோஷமா தெரியறாங்க!
என்ன கொடும சார் இது!! @ 



12)காதலில் விழுவது என்பது உயரமான கட்டிடத்தில் இருந்து குதிப்பதை போன்றது,
மூளை வேண்டாம் என்று சொன்னாலும் பறக்கமுடியும் என்று இதயம் சொல்லும்!
@


13)  5 பெத்தா அரசன் எப்படி ஆண்டி ஆவான்?
 அரசி தானே ஆண்ட்டி ஆகும்??? # டவுட்டு @  



14) மிக மோசமான ஞாபகசக்தி என்பது என்னவென்றால் திருமண தேதி நேற்றே போய்விட்டது என்று இன்று நினைவுக்கு வருவதுதான்.!  @



15) ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருப்பதாக சொல்வது தவறு, வெற்றிபெறும் ஆண்களையே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்...!!  @ 



16) நேர்மை என்பது விலைமதிக்கமுடியாத பொருள்.. 
     அதை தரக்குறைவானவர்களிடம் எதிர் பார்க்காதீர்கள்...!@ 



17) யார் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும், தம் பேச்சை தொடங்கி தொடர்பவர்கள் இருவர், 1 . ஆசிரியர் 2 . அரசியல்வாதி ! @  



18)  நிறைய சித்தப்பாக்களை, அத்தைகளை கொடுத்த கடவுள், 
நாம் லீவு போடுவதற்கு வெறும் இரண்டு தாத்தா, பாட்டிகளை மட்டுமே கொடுத்ததன் மர்மம் என்ன? @



19) ஏழாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..
 ஏழாம் அறிவு வரவேண்டும் என்பதற்காக !  @


20) படகில் துளை ஏற்ப்பட்டால் இன்னொரு துளை போட்டு நீரை வெளியேற்றும்          முயற்சிதான், 
     காதலில் தோல்வி அடைந்தவன் இன்னொரு முறை காதலிப்பதும் !@ 



21) மொத குழந்தை பிறந்தப்ப அப்பா ஆனேன்.
     ரெண்டாவது வந்ததுக்கப்பறம் நாட்டாமை ஆக்கிட்டாங்களே.. 
      தினம் பஞ்சயாத்து பண்ணி # முடியல. @ 



22) தடுக்கி விழுந்துவிட்டேன் பல் உடைந்து விட்டது.
       நல்ல வேளை செல் உடையவில்லை # costly mobile @ 



23)  பிரச்சனை கரடியா வரும்போது, நம்ம நட்பு எல்லாம் பெரிய பெரிய மரமா ஏறி ஒளிஞ்சுகிடுது ! @ 



24 ) பெண்களின் மூளை 5000GB Hard Disk; ஆண்களின் மூளை ஜஸ்ட் 64 MB RAM :)  




25) அறிவியல் பூர்வ சினிமா எடுக்கும் வெள்ளையர்கள்தான் பேய் பிசாசு சாத்தான் குறித்தும் படம் எடுத்து உண்மை என நம்ப வைக்கிறார்கள். @ 
26)  உலக வங்கியே உனக்கு சொந்தமானாலும் கடைசியில் உனக்கு சொந்தமாவது  நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் தான் - ஆட்டோ வாசகம் @
27)  காதல் ஜோடிகள் பிரிந்தாலும், அடுத்தவர்களுடன் ஜோடிசேர்வதுண்டு ஆனால், "செருப்பின்" ஜோடி பிரிந்தால்? # கொடும  தத்துவம் @ 

28) நான் மிகவும் ரசித்த ஒரு பாதுகாப்பு ஸ்லோகன் :
 ’ஐம்புலன்கள் கவனமாய் இருந்தால் ஆம்புலன்ஸ் தேவையில்லை’ @


29) 5 பைசாவுக்கு பெறமாட்ட"ன்னு திட்டுனவாங்களாம், இனிமேல் "50 பைசாவுக்கு பெறமாட்ட"ன்னு திட்டலாம் # வாழ்க்கைதரம் உயர்வு.@ 


30) காதல் கவிதை எழுதினால் காதலிப்பவனும் அல்ல, 
சோக கவிதை எழுதினால் காதல் தோல்வியும் அல்ல. @ 

31)காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , 
பலர் - கெட்ட வார்த்தை அது. @ 

32) ஏண்டி குழந்தை அழுதுட்டு இருக்குறதை கூட கண்டுக்காம சீரியல் பார்த்துட்டு இருக்க?
 மனைவி: குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுதுட்டு இருக்கு @ 

33) Facebook ல  பொண்ணுங்க வணக்கம்னு பதிவு போட்டா போதும். 
140லைக்,  100 கமெண்ட். என் இனிய தமிழ் பெண்களே உங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.. @ 


34)  சரக்கடிச்சவன விட, "சென்ட்" அடிச்சவன் கிட்டே தான், நெருங்கவே முடியல! என்னா கப்பு! # வாசனைத் திரவியங்கள்! @ 


4 comments:

சந்தானம் as பார்த்தா said...

//

2) கல்யாண செலவில் கால்வாசி, நிச்சயதார்த்துக்குப் பின் செல்போன் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது! @naiyandi

//

100% True.

சந்தானம் as பார்த்தா said...

//

20) படகில் துளை ஏற்ப்பட்டால் இன்னொரு துளை போட்டு நீரை வெளியேற்றும் முயற்சிதான்,
காதலில் தோல்வி அடைந்தவன் இன்னொரு முறை காதலிப்பதும் !@ Kaniyen

//

ஓ.. அப்படியா...
புதுசா இருக்கு இந்த தத்துவம்...

சந்தானம் as பார்த்தா said...

//

31)காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல ,
பலர் - கெட்ட வார்த்தை அது. @ MarmaDesam

//

ரொம்ப அனுபவித்து சொல்லியிருக்கிறார் போல..

சந்தானம் as பார்த்தா said...

//

34) சரக்கடிச்சவன விட, "சென்ட்" அடிச்சவன் கிட்டே தான், நெருங்கவே முடியல! என்னா கப்பு! # வாசனைத் திரவியங்கள்! @Tottodaing

//

Same blood...

Blogger Widgets